கள்ளக்காதலில் இறந்தது என் கணவர் இல்லை, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சீரியல் நடிகை ரேகா!

கள்ளக்காதலில் இறந்தது என் கணவர் இல்லை, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சீரியல் நடிகை ரேகா!

in Entertainment / Movies

சீரியல் நடிகை ரேகாவின் கணவர், கோபிநாத் கள்ளக்காதல் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மனஉளைச்சலால், அவருடைய அலுவலகத்திலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக பரபரப்பு தகவல் வெளியான நிலையில், அவர் எனது கணவர் அல்ல என நடிகை ரேகா கூறியுள்ளார்.

ஓவியா, நாம் இருவர் நமக்கு இருவர், போன்ற சீரியலில் நடித்து வருபவர் நடிகை ரேகா. இவரது கணவர் கோபிநாத்க்கும் அலுவலகத்தில் பணியாற்றிய பெண் ஒருவருக்கும் இடையே தவறான தொடர்பு இருந்ததாகவும், இதனால் நடிகை ரேகாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்த நிலையில், மன உளச்சல் காரணமாக அவரது கணவர் கிறிஸ்துமஸ் தினத்தன்று அலுவலகத்திலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின. இது சின்னதிரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சீரியல் நடிகை ரேகா, கள்ளக்காதல் பிரச்சனையில் உயிரிழந்தது எனது கணவர் இல்லை என்றும், தற்கொலை செய்து கொண்ட கோபிநாத்தின் மனைவி பெயர் ஜெனிபர் ரேகா என்றும் தெரிவித்துள்ளார். அது தெரியாமல் தன்னுடைய புகைப்படத்தை போட்டு செய்திகள் வெளியிட்டுள்ளதாகவும், அந்த ரேகா நான் இல்லை எனவும் கூறியுள்ளார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top