உலகில் புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம் அமெரிக்காவின் நியூயார்க் நகரம், லண்டன், சிங்கப்பூர், டெல்லி உள்ளிட்ட இடங்களில் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் உலகப்புகழ் பெற்ற ஏ-லிஸ்ட் நடிகர்களின் மெழுகு சிலைகள் நிறுவப்படும். அருங்காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்கள் தங்களுக்கு விருப்பமான நட்சத்திரங்களின் மெழுகு சிலை அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலுக்கு மெழுகு சிலை சிங்கப்பூரில் அமைந்துள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் திறக்கப்பட உள்ளது. தென்னிந்திய நடிகைக்கு இங்கு மெழுகு சிலை வைப்பது இதுவே முதன் முறை. தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வரும் காஜலுக்கு இப்படி ஒரு கௌரவம் கிடைத்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த மெழுகு சிலையானது வரும் 2020-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி திறக்கப்படவுள்ளது. இதை நடிகை காஜல் அகர்வாலே திறந்துவைக்கவுள்ளார்.
0 Comments