இளையராஜாவை கௌரவிக்கும் கேரள அரசு.

இளையராஜாவை கௌரவிக்கும் கேரள அரசு.

in Entertainment / Music

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கேரள அரசு ஹரிவராசனம் விருது வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஆண்டு தோறும் சபரிமலை ஐயப்பன் புகழை பாடும் பாடகர்களுக்கு கேரள அரசு ஹரிவராசனம் என்னும் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு சபரிமலை குறித்த மதநல்லிணக்கத்தையும், உலக சகோதரத்துவத்தையும் பாடல்கள் மூலமாக பரப்பிய இசையமைப்பாளர் இளையராஜவுக்கு கேரள அரசு ஹரிவராசனம் விருது வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விருதுடன் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படவுள்ளது. இந்த விருது வரும் ஜனவரி 15ஆம் தேதி சபரிமலையில் வைத்து இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top