குடியுரிமை மசோதா சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் மாணவ அமைப்புகள் போராடி வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் ஜாமியா பல்கலைகழக மாணவர்கள் போராட்டம் நடத்தும் போது வன்முறை வெடித்ததாகக் கூறி மாணவர்கள் மீது காவல்துறையினர் கொலை வெறித்தாக்குதல் நாட்யஜியுள்ளார்..
ஜாமியா பல்கலைகழக மாணவர்களின் போராட்டம் அமைதியான நிலைக்குத் திரும்பிய பிறகும் இந்த கொலை வெறித்தாக்குதலைக் கண்டித்து இந்தியா முழுவதும் மாணவர் தன்னெழுச்சிப் போராட்டங்கள் வெடித்தது. அப்படி வடகிழக்கு டெல்லியில் நடைபெற்று வந்த மாணவர் போராட்டத்தில் மீண்டும் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி காவல்துறையினர் மாணவர் இடையே மோதல் ஏற்பட்டது.
மாணவர் போலிசார் மோதல் தீவிரமடைந்ததையொட்டி கண்ணீர் புகைக் குண்டுகளை வீசு கூட்டத்தை கலைக்கும் முயற்சியில் போலிசார் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் சீலாம்பூர். ஜாபர்பாத் இடையேயான 66 அடி சாலை மூடப்பட்டுள்ளது. ஏற்கனவே தொலைத் தொடர்பு சேவைகள் முடக்கப்பட்டிருக்கும் நிலைமையில் மாணவர்கள் மீதான காவல்துறையின் தாக்குதல் நாடு முழுவதும் அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
0 Comments