தனியார் சேனல்களுக்கு எதிரான மதிய அரசின் நடவடிக்கை!

தனியார் சேனல்களுக்கு எதிரான மதிய அரசின் நடவடிக்கை!

in News / Politics

இன்று மக்களவையில் உரையாற்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர், கடந்த 5 ஆண்டுகளில் தனியார் சேனல்களுக்கு எதிராக நூற்றுக்கும் மேற்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டுத்தொடரின் பொது மக்களவையில் உரையாற்றிய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர், சில தனியார் சேனல்கள் மத்திய அரசின் கட்டுப்பாடுகள் சிலவற்றை மீறி நடப்பதை ஓர் வழக்கமாகவே கொண்டுள்ளதாகவும், கடந்த 2014ஆம் ஆண்டு முதல், தனியார் சேனல்களுக்கு எதிராக சுமார் 124 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், அவை அனைத்தும் முழுமையாக விசாரிக்கப்பட்ட பின்னர் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் கட்டுப்பாடுகளை மீறுவது, தவறான கருத்துக்களை பரப்புவது, தவறான வீடியோ மற்றும் ஆடியோக்களை வெளியிடுவது போன்ற பல்வேறு குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளில், 46 அறிவுரைகள், 39 எச்சரிக்கைகள் தனியார் சேனல்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இனி வரும் நாட்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top