சீமான் மட்டும் தான் தமிழ்த் தாயின் பிள்ளையா?. ராகவா லாரன்ஸ் மீண்டும் கடும் தாக்கு

சீமான் மட்டும் தான் தமிழ்த் தாயின் பிள்ளையா?. ராகவா லாரன்ஸ் மீண்டும் கடும் தாக்கு

in News / Politics

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, நடிகர் ராகவா லாரன்ஸ் மீண்டும் கடுமையாக தாக்கி பேசி உள்ளார். இது பெரும் சர்ச்சையாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் இசைவெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், சிறுவயதில் கமல்ஹாசன் சினிமா பட போஸ்டர்கள் மீது சாணி அடித்தேன் என பேசினார். அத்துடன் ரஜினிகாந்துக்கு எதிராக சீமான் பேசிவருவது நாட்டுக்கு நல்லது அல்ல என விமர்சித்தார். இதற்கு சீமானும் அவரது கட்சியினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ரஜினிகாந்தின் 70-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய ராகவா லாரன்ஸ் சீமான் பெயரை முதலில் குறிப்பிடாமல் மறைமுகமாக தாக்கிப் பேசினார்.

அவர் பேசுகையில், தாம் மட்டுமே தமிழ்த் தாயின் மூத்த பிள்ளை என பேசுகிறார்? அப்படியானால் நாங்கள் என்ன அமெரிக்கா தாயின் பிள்ளைகளா? நாங்களும் தமிழ்த் தாயின் பிள்ளைகள்தான் என சீமானை மறைமுகமாக சாடினார்.

அரசியல் எனும் ஓட்டப்பந்தயத்தில் எல்லோரும் ஓடித்தான் வெற்றி பெறுவாங்க.. அதுதான் ஆம்பள.. ஆனால் தாம் மட்டுமே ஓடி வெற்றி பெறுவேன் என நினைப்பவர்களை என்ன சொல்வது?

விமர்சிப்பவர்களை பெயர் சொன்னால் தான் ஆம்பளைன்னு சொல்லுவாங்க. அவங்க பெயர் சொல்லி தான் நான் ஆம்பளை என நிருபிக்க வேண்டுமா?. உங்களை விட நான் நன்றாக பேசுவேன். நான் இராயபுரத்தில் பிறந்தவன். என்னால், என்ன வேண்டுமானாலும் பேச முடியும். என்றார் ராகவா லாரன்ஸ்.

அவர் தமது பேச்சின் போது சீமான் அண்ணா என குறிப்பிட்டு பேச முயற்சித்தார். ஆனால் சீமான் பெயரை உச்சரிக்கவே கூடாது என ரஜினி ரசிகர்கள் குரல் எழுப்பி கூச்சலிட்டனர். இதனால் நான் அவர் பெயரையே சொல்லவில்லை என கூறினார் ராகவா லாரன்ஸ்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top