குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பத்மஸ்ரீ விருதை திரும்பி கொடுக்க எழுத்தாளர் முடிவு!

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பத்மஸ்ரீ விருதை திரும்பி கொடுக்க எழுத்தாளர் முடிவு!

in News / Politics

மத்திய அரசின் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் இருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இதை எதிர்த்து பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் பிரபல உருது மொழி எழுத்தாளர் முஸ்தபா உசேனும் இந்த மசோதாவுக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அதை வெளிப்படுத்தும் விதமாக, தனக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டிருந்த பத்மஸ்ரீ விருதை திருப்பி கொடுக்க முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘நாட்டில் அச்சம் மற்றும் வெறுப்பு நிறைந்த சூழலை நாம் அனுபவித்து வருகிறோம். இதனால் நான் மூச்சு திணறுகிறேன். என் மனசாட்சி என்னை குத்துகிறது. இதற்கு மேலும் என்னால் அமைதியாக இருக்க முடியாது. எனவே பத்மஸ்ரீ விருதை திரும்ப கொடுக்க முடிவு செய்துள்ளேன்’ என்று தெரிவித்தார்.

நகைச்சுவை எழுத்தாளரான தனது வாழ்க்கையில் இருந்து சிரிப்பு நீங்கி விட்டதாகவும் வருத்தத்துடன் அவர் குறிப்பிட்டார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top