நடிகர் சித்தார்த், திருமாவளவன் உட்பட 600 பேர் மீது வழக்கு!

நடிகர் சித்தார்த், திருமாவளவன் உட்பட 600 பேர் மீது வழக்கு!

in News / Politics

குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், நடிகர் சித்தார்த் உட்பட 600 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக சென்னை வள்ளுவர்கோட்டத்தில், பல்வேறு அமைப்புகள் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இங்கு போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்துவிட்ட நிலையில் நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நடிகர் சித்தார்த், இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

அப்போது குடியுரிமைத் திருத்த சட்டத்தை திரும்பபெற்று, டெல்லியில் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனமும் தெரிவித்தனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவன், சித்தார்த் உள்பட 600 பேர் மீது, 143 மற்றும் 41 பிரிவு 6 ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top