கடும் எதிர்ப்புக்கு மத்தியில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம்!

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம்!

in News / Politics

குடியுரிமை சட்டதிருத்த மசோதா, 9 மணி நேர நீண்ட கடுமையான விவாதத்துக்குப்பின், மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 311 எம்.பி.,க்கள் வாக்களித்தனர். இந்த மசோதாவுக்கு, சமீபத்தில், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதாவை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றி, சட்டமாக அமல்படுத்த மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் (டிச.,9) மசோதாவை, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவையில் தாக்கல் செய்தார். விவாதத்தின் போது, குடியுரிமை சட்ட மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என அமித்ஷா விளக்கமளித்தார். ஆனால் காங்., உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மசோதாவுக்கு அதிமுக., முழு ஆதரவு தெரிவித்தது. அதேபோல், இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசியும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் பேசினார்.

அப்போது, குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நகலை அவர் அவையிலேயே கிழித்ததால் அங்கு பெரும், பரபரப்பு ஏற்பட்டது. பாகுபாடு காரணமாக தென்னாப்பிரிக்காவில் தனது குடியுரிமையை மகாத்மா காந்தி கிழித்ததை சுட்டிக்காட்டி ஓவைசி இதனை செய்தார்.

மசோதா மீது 9 மணி நேரத்திற்கும் மேல் நீண்ட விவாதம் நடந்தது. விவாதத்திற்கு பின், ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 311 ஓட்டுகளும், எதிராக 80 ஓட்டுகளும் பதிவாகின. இதனையடுத்து மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top