காயத்ரி ரகுராமின் டுவிட்டர் கணக்கு முடக்கம்!

காயத்ரி ரகுராமின் டுவிட்டர் கணக்கு முடக்கம்!

in News / Politics

இந்து கடவுள்களை அவதூறாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை நடிகை காயத்ரி ரகுராம் கடுமையாக சாடினார். தனது த்விட்டேர் பகுதியில் நேரடியாக சவால் விடுத்தும் சில கருத்துகளை பதிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காயத்ரி ரகுராம் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

அதையும் டுவிட்டரில் வெளியிட்டார். தனக்கு போனில் வரும் அழைப்புகளையும் நேரலை செய்தார். வருகிற 27-ந்தேதி மெரினாவுக்கு வருகிறேன். அப்போது திருமாவளவன் என்னை சந்தித்து விவாதிக்க தயாரா? என்றும் டுவிட்டரில் கேள்வி எழுப்பினார். திருமாவளவன் மீது போலீசில் புகார் அளிப்பேன் என்றும் தெரிவித்தார்

இந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் காயத்ரி ரகுராமின் டுவிட்டர் கணக்கு திடீரென்று முடக்கப்பட்டு உள்ளது. விதிமுறையை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக டுவிட்டர் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. காயத்ரி ரகுராமை டுவிட்டரில் ஏராளமானோர் பின் தொடர்ந்து வந்தனர். அவர்களுக்கு இந்த முடக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top