ஆட்சிக்கு வந்தால் கொன்றுவிடுவேன் - வழக்கு தொடுத்தவர்களை எச்சரித்த சீமான்!

ஆட்சிக்கு வந்தால் கொன்றுவிடுவேன் - வழக்கு தொடுத்தவர்களை எச்சரித்த சீமான்!

in News / Politics

நாம் தமிழர் கட்சியின் போஸ்டர்களை கிழிப்பவர்கள், தம்பிகள் மீது வழக்கு போடுபவர்கள் எல்லோரும் தாம் ஆட்சிக்கு வருவதற்குள் இறந்துவிடுமாறும் சீமான் எச்சரித்துள்ளார்.

அப்படி இல்லையென்றால் அவர்களை கொன்றுவிடுவேன் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்ச்சியில் உரையாற்றிய சீமான், தங்கள் மீது வழக்கு போடுபவர்கள், தங்கள் போஸ்டர்களை கிழிப்பவர்களுடைய பெயர்ப்பட்டியலை தாம் தயார் செய்து வைத்திருப்பதாகக் கூறினார்.

வன்முறைக்கு எதிராக வன்முறையை கையில் எடுப்பதும் அகிம்சைதான். வரும் தேத்தல்களில் நன் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் மட்டுமே மக்கள் வாழ முடியும் இல்லையெனில் செத்து மடிய வேண்டியதுதான் என்றும் சீமான் கூறினார்.

என் நலம் விரும்பிகள் ஏதாவது ஒரு புதுவிதமான யுக்தியை யோசித்து மேலே வந்து காட்டுங்கள் என கூறுகின்றனர். இதனை அடுத்து வரும் தேர்தலில் நாம் தமிழர் ஆட்சியை பிடித்தால் வீட்டுக்கு ஒரு கார் வழங்க போகிறேன்.

வென்ற பிறகு மக்கள் வீடுகளுக்கு எல்லாம் சென்று ஒருவர் புகைப்படத்தை தருவேன். அது வேறு யாருமல்ல அம்பேத்கார் என கூறி அவர் பாணியில் சிரித்தார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top