மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போன்று மாறிய கனிமொழி - ஆச்சர்யத்தில் தொண்டர்கள்!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போன்று மாறிய கனிமொழி - ஆச்சர்யத்தில் தொண்டர்கள்!

in News / Politics

திமுகவில் கனிமொழியின் ட்விட்டர் பதிவு திமுக தொண்டர்களை பெரும் அதிர்ச்சிக்கும் ஆச்சர்யத்திற்கும் உள்ளாக்கியுள்ளது.

சென்னையில், நேற்றைய தினம், குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறை ஆகியவற்றுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் திமுக எம்பியும், மகளிர் அணி செயலாளருமான கனிமொழி பங்கேற்று உரையாற்றினார்.

இது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில் மூத்த இடதுசாரி தலைவர் நல்லகண்ணுடன் பேசிக் கொண்டிருக்கும் ஒரு படமும், மேடையில் பேசுகிற மற்றொரு படமும் பதிவேற்றம் செய்திருந்தார்..

இப்படங்கள்தான் திமுக தொண்டர்களை விவாதிக்க வைத்துள்ளது. அதில் கனிமொழி, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை போலவே உடை, சிகை அலங்காரம் செய்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்திற்குள்ளாக்கியுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top