மு.க ஸ்டாலின் வெற்றி பெற்றதற்காக நாக்கை அறுத்து கொண்ட திருமணமான இளம்பெண்! இரத்த வெள்ளத்தில் கிடந்த அதிர்ச்சி சம்பவம்

மு.க ஸ்டாலின் வெற்றி பெற்றதற்காக நாக்கை அறுத்து கொண்ட திருமணமான இளம்பெண்! இரத்த வெள்ளத்தில் கிடந்த அதிர்ச்சி சம்பவம்

in News / Politics

திமுக வெற்றி பெற்று மு.க ஸ்டாலின் முதல்வராகவுள்ள நிலையில் நேர்த்திக்கடனுக்காக பெண் ஒருவர் தனது நாக்கை அறுத்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி உள்ளது. அதிமுக கூட்டணி 75 தொகுதிகளில் மட்டுமே வெற்றியடைந்துள்ளது. இதையடுத்து திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி அமைக்க உள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வரும் 7-ம் திகதி பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் ஸ்டாலின் முதல்வராக உள்ளதால் பெண் ஒருவர் நாக்கினை அறுத்து தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றி உள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பொதுவகுடியைச் சேர்ந்த கார்த்திக் மனைவி வனிதா (32). இவர் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க ஸ்டாலின் முதல்வர் ஆனால் தனது நாக்கை அறுத்து உண்டியலில் போட்டுக் கொள்வதாக வேண்டியுள்ளார்.

அதன்படி இன்று காலை பரமக்குடி முத்தாலம்மன் கோவில் வாசலில் முன்பு தனது நாக்கினை கத்தியால் அறுத்து உண்டியலில் போட்டு விடுவதாக எண்ணி தனது நாக்கை அறுத்துக் கொண்டார்.

கோவில் திறக்காததால் நாக்கினை வாசல் படியில் வைத்துவிட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். பின் பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுப்பி வைத்தனர்.

அங்கு வனிதாவுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top