2002, குஜராத் கலவரங்களில் மோடிக்கு பங்கு இல்லை என நானாவதி கமிஷன் அறிக்கை...

2002, குஜராத் கலவரங்களில் மோடிக்கு பங்கு இல்லை என நானாவதி கமிஷன் அறிக்கை...

in News / Politics

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து நடைபெற்ற மதக்கலவரங்களில், அப்போது குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த மோடிக்கு எந்த பங்கும் இல்லை எனவும், அந்த கலவரஙகள் யாராலும் தூண்டப்படவில்லை என்றும் அது குறித்து விசாரித்த நானாவதி கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டை உலுக்கிய குஜராத் மதக்கலவரம் குறித்து அம்மாநில அரசு நியமித்த நானாவதி கமிஷன் தனது இறுதி அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது. அது குஜராத் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2002 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி கோத்ரா அருகே கரசேவகர்கள் வந்த சபர்மதி ரயிலின் பெட்டி தீ வைக்கப்பட்டது. அதில் 59 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து குஜராத் முழுதும் மத்க்கலவரம் வெடித்து ஆயிரத்து 169 பேர் கொல்லப்பட்டனர்.

மதக்கலவரங்கள் குறித்து விசாரிக்க அப்போதைய குஜராத் முதலமைச்சர் மோடி நீதிபதி ஷா தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்தார். பின்னர் அது நீதிபதி நானாவதி தலைமையிலான 2 நபர் கமிஷனாக மாற்றப்பட்டது. 2004 ல், முதலமைச்சர், மாநில அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளையும் விசாரிக்கும் வகையில் கமிஷனின் சட்டதிட்டங்கள் மாற்றப்பட்டன.

தனது விசாரணையின் முதல் அறிக்கையை நானாவதி கமிஷன் ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டது. அதிலும் மோடி மீதான எந்த குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று தாக்கலான இறுதி அறிக்கை மோடி மற்றும் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்ததுடன், மதக்கலவரங்களை கட்டுப்படுத்த காவல் அதிகாரிகள் தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டி உள்ளது.

மதக்கலவரங்கள் தொடர்பாக குஜராத் அரசு மீது 3 ஐ.பி,.எஸ். அதிகாரிகள் அளித்த சத்தியபிரமாணங்களையும், ஆதாரங்களையும் கமிஷன் தள்ளுபடி செய்துள்ளது.இவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை இணை அமைச்சர் பிரதீப்சிங் ஜடேஜா தெரிவித்துள்ளா

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top