தாக்குதல்களை நிறுத்தி கொள்ளுமாறு ஜிகாத் அமைப்பிற்கு நேதன்யாஹூ கடும் எச்சரிக்கை!!

தாக்குதல்களை நிறுத்தி கொள்ளுமாறு ஜிகாத் அமைப்பிற்கு நேதன்யாஹூ கடும் எச்சரிக்கை!!

in News / Politics

"தாக்குதல்களை இத்துடன் நிறுத்தி கொள்ளவில்லையெனில் மிகபெரிய அளவில் தமது செயல்களுக்கு பதிலளிக்க வேண்டியிருக்கும்" என்று இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் தலைவரான பஹாத் அபு அல் அடாவின் மரணத்தை தொடர்ந்து, இஸ்ரேல் நாட்டில் 2வது நாளாக ஏவுகணை தாக்குதல்களில் ஈடுபட்டிருக்கும் ஜிஹாத் பயங்கரவாதிகளை கடுமையாக எச்சர்த்துள்ளார் அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ.

ஈரானின் உதவியுடன் இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் தலைவரான பஹாத் அபு அல் அடா, இஸ்ரேலுக்கு எதிராக பல பயங்கரவாத தாக்குதல்களும், ஏவுகணை தாக்குதல்களும் மேற்கொண்டுள்ளார். இவரின் தாக்குதல்களினால் அந்நாட்டில் பல்லாயிரக்கணக்கைனோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இஸ்ரேல் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, அந்நாட்டின் அமைதிக்கு மிகபெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்த பஹாத் அபு அல் அடா மீது தாக்குதல் மேற்கொண்டிருந்த இஸ்ரேல் அரசு அவரை கொன்றுவிட்டது.

இஸ்ரேல் அரசின் இந்த தாக்குதலை தொடர்ந்து, அந்நாட்டின் ஆஷ்கிலான், ஆஷ்தோத், கிதேரா போன்ற பகுதிகளில் நேற்று காலை தொடங்கிய பயங்கரவாத ஏவுகணை தாக்குதல்கள் இன்று வரை தொடர்ந்து வருகிறது. இதனால் அப்பாவி மக்கள் பலரும் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலினால் ஆத்திரமடைந்துள்ள அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யைஹூ, தற்போது மேற்கொண்டிருக்கும் தாக்குதல்களை நிறுத்தி கொள்ளுமாறும், அப்படி நிறுத்தாத பட்சத்தில் மறுதாக்குதலில் ஈடுபட சிறிது நேரம் எடுத்து கொண்டாலும் பதிலடி மிகவும் பலமாக இருக்கும் என்றும் ஜிகாத் அமைப்புகளை கடுமையாக எச்சரித்துள்ளார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top