குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு: வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வலுக்கிறது

குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு: வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வலுக்கிறது

in News / Politics

மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதன் மூலம் மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது.

குடியுரிமை மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் பெரிதளவில் வலுத்து வருகிறது. அசாமில் போராட்டம் வெடித்து உள்ளன. இந்த போராட்டத்தில் திப்ருகரில் உள்ள அனைத்து அசாம் மாணவர் சங்கமும் (ஏஏஎஸ்யூ) ஈடுபட்டு உள்ளது.

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாணவர் அமைப்பு (நேசோ) மற்றும் ஏஏஎஸ்யூ ஆகியவற்றின் 12 மணி நேர 'பந்த்' அழைப்பைத் தொடர்ந்து கவுகாத்தியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. வாகனங்கள இயங்காததால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. சாலைகளில் டயர்களை கொளுத்திப்போட்டு போக்குவரத்து தடையை ஏற்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top