ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் இன்று பதவியேற்பு..!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் இன்று பதவியேற்பு..!

in News / Politics

தமிழகத்தின் 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் இன்று பதவியேற்றுக் கொள்கின்றனர். 

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 5 ஆயிரத்து 90 ஒன்றிய வார்டு உறுப்பினர், 9 ஆயிரத்து 624 கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. 

திமுக 243 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் இடங்களையும், அதிமுக 214 இடங்களையும் கைப்பற்றியது.

இதே போல், 2,099 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் இடங்களை திமுகவும், 1,781 இடங்களை அதிமுகவும், கைப்பற்றின.

இந்த நிலையில், வெற்றி பெற்றவர்களுக்கு அந்தந்த உள்ளாட்சி அலுவலகங்களில் பதவியேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இதனிடையே ஒன்றிய தலைவர், ஊராட்சி துணைத் தலைவர், மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவியிடங்களுக்கு வரும் 11-ம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top