பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினால் துப்பாக்கியால் சுடுங்கள் - ரயில்வே இணை அமைச்சரின் சர்ச்சைக் கருத்து!

பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினால் துப்பாக்கியால் சுடுங்கள் - ரயில்வே இணை அமைச்சரின் சர்ச்சைக் கருத்து!

in News / Politics

குடியுரிமை மசோதாவிற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் டெல்லியில் போராட்டக்காரர்கள் - காவல்துறையினரிடையே மோதல் சம்பவம் அடிக்கடி நடந்தேறி வருகிறது.

போராட்டக்காரர்கள் மற்றும் எதிர்கட்சிகள் சார்பில் அமைதியாக போராடும் எங்கள் மீது காவல்துறை காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை நடத்துகிறது என்கிற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். ஆனால் ஆளும் தரப்பு மற்றும் காவல்துறையினர் சார்பில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் போராட்டங்களின் போது ரயில் உள்ளிட்ட பொதுச்சொத்துகளைச் சேதப்படுத்துவோரை சுட்டுக்கொள்ளுங்கள் என மாவட்ட நிர்வாகம் மற்றும் ரயில்வே அதிகரிகளுக்கு ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி சர்ச்சையை ஏற்படுத்தும் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏற்கனவே மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ரயில்வே துறை பல லட்சங்கள் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதைச் சரி செய்வதற்காக 13 லட்சம் பேர் இரவு பகல் பாராது வேலை செய்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சமூக விரோதிகள் எதிர்கட்சிகளின் உதவியோடு நாட்டுக்கு இதுபோன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக ரயில்வே இணை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top