குடியரசு தலைவர் ஆட்சியை எதிர்த்து சிவசேனா வழக்கு: இன்று விசாரணை!

குடியரசு தலைவர் ஆட்சியை எதிர்த்து சிவசேனா வழக்கு: இன்று விசாரணை!

in News / Politics

மகாராஷ்டிர மாநிலத்தில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலை நீடித்து வந்த நிலையில் நேற்று அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது. கவர்னர் அறிக்கையின்படியும் மத்திய அமைச்சரவை பரிந்துரையின்படியும் குடியரசுத் தலைவர் ஆட்சியை நேற்று மாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் பிறப்பித்தார்

இருப்பினும் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க மெஜாரிட்டியுடன் அரசியல் கட்சிகள் முன்வந்தால் குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கிக் கொள்ளப்படும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

இந்த நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி ஏற்கனவே சிவசேனா கட்சி சுப்ரீம் கோர்ட்டில் இன்னொரு வழக்கையும் தாக்கல் செய்துள்ளது

அந்த வழக்கில் சிவசேனா கட்சி ஆட்சியமைக்க போதுமான அவகாசம் அம்மாநில ஆளுநர் வழஙகவில்லை என்று அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கும் இன்று விசாரணைக்கு வரும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது

இந்த இரு வழக்குகளிலும் ஏதாவது அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டல் மீண்டும் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top