கோ பேக் அதிமுக - மயிலாடுதுறை அருகே அமைச்சருக்கு எதிராக கோஷம்!

கோ பேக் அதிமுக - மயிலாடுதுறை அருகே அமைச்சருக்கு எதிராக கோஷம்!

in News / Politics

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கு வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர்கள் செல்லும் இடங்களில் பேசுவது சர்ச்சைகளையும் உண்டாக்கி வருகிறது.

இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள நீடூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளுக்கு அம்மாவட்ட அமைச்சர் ஓ.எஸ். மணியன் உள்ளாட்சித் தேர்தலுக்காக பிரசாரம் செய்யச் சென்றார். இன்று (டிசம்பர் 24) காலை அமைச்சர் அந்த கிராமத்துக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகிறார் என்ற தகவல் கிடைத்தவுடனேயே நீடூர் கிராம மக்கள் சுமார் முப்பது முதல் ஐம்பது பேர் வரையில் திடீரென சாலையில் திரண்டனர்.

திரும்பிப் போ திரும்பிப் போ... அதிமுகவே திரும்பிப் போ... திரும்பிப் போ திரும்பிப் போ அமைச்சரே திரும்பிப் போ. எங்கள் ஓட்டு உங்களுக்கில்லை... எங்கள் ஓட்டு உங்களுக்கில்லை” என்று கோஷமிட ஆரம்பித்தனர். தகவல் அறிந்து போலீசார் வந்து அந்த இளைஞர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் கோ பேக் மோடி என்ற கோஷம்தான் இதுவரையில் பிரபலமாக இருந்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு அதிமுகவின் 11 எம்.பிகளும் ராஜ்யசபாவில் ஆதரித்து ஓட்டுப் போட்டு அதை சட்டமாக்க காரணமாக இருந்ததால், இப்போது கோ பேக் அதிமுக என்ற கோஷம் புதிதாக உருவாகியிருக்கிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top