துரோகிகள் சிறைக்கு செல்வார்கள்;இந்த ஆட்சி விரைவில் கவிழ்ந்துவிடும்: சசிகலா

துரோகிகள் சிறைக்கு செல்வார்கள்;இந்த ஆட்சி விரைவில் கவிழ்ந்துவிடும்: சசிகலா

in News / Politics

துரோகிகள் விரைவில் சிறைக்கு செல்வார்கள் என்றும், இந்த ஆட்சியும் விரைவில் கவிழ்ந்துவிடும் என்றும் தினகரனிடம் சசிகலா கூறியுள்ளாராம்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை 15 நாட்களுக்கு ஒருமுறை தினகரன் சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பின்போது தற்போதய தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் தினகரன் சசிகலாவிடம் தெரிவிப்பார்.

இந்த நிலையில், சமீபத்தில் சிறையில் சசிகலாவை சந்தித்த தினகரன், அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து, சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் உங்களை கட்சியினுள் சேர்க்க வேண்டாம் எனவும் கூறிவருகிறார்கள் என்று தெரிவித்தார். இதற்கு சசிகலா, துரோகிகள் விரைவில் சிறைக்கு செல்வார்கள் என்றும் கவலைப்பட வேண்டாம், இனி நடப்பது நமக்கு நல்லவையாகவே நடக்கும் என்றும் தினகரனிடம் கூறினாராம். மேலும், இந்த ஆட்சி விரைவில் கவிழ்ந்துவிடும் என்பதால் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் தினகரனுக்கு சசிகலா அறிவுறுத்தினாராம்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top