தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் விரைவில் காவி கொடி ஏற்றுவோம்: சிவசேனா எச்சரிக்கை!

தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் விரைவில் காவி கொடி ஏற்றுவோம்: சிவசேனா எச்சரிக்கை!

in News / Politics

தமிழகத்தில் உள்ள அணைத்து கோயில்களில் விரைவில் காவி கொடி ஏற்றுவோம், என்று சிவசேனா கட்சியினர் தெரிவித்துள்ளனர். சிவசேனா கட்சி தலைவர் பால்தாக்கரேவின் 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் தமிழக சிவசேனா கட்சி சார்பில், மாநில தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று பால்தாக்கரேவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில், தேசிய அமைப்பாளர் அண்ணாமலை, மாநில துணை தலைவர் செந்தில், மனோஜ், வேணுகோபால் உட்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது மாநில தலைவர் ரவிச்சந்திரன் பேசுகையில், ''தமிழகத்தில் உள்ள கோயில்கள் அனைத்திலும் விரைவில் காவிக் கொடி ஏற்றப்பட வேண்டும். இதனை
தமிழக அரசு உடனடியாக செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி தமிழக அரசு கோயில்களில் காவி கொடியை ஏற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சிவசேனா கட்சியே அனைத்து கோயில்களிலும் காவி கொடியை ஏற்றும். இது தமிழக அரசுக்கு சிவசேனா சார்பில் விடப்படும் சவால்'' என தெரிவித்தார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top