ஸ்ரீரங்கம் ஆலயத்தில் சிலைகள் கடத்தல் வழக்கில் ரங்கராஜன் நரசிம்மன் கைது செய்யப்பட்டு சொந்த ஜாமினில் விடுவிப்பு!

ஸ்ரீரங்கம் ஆலயத்தில் சிலைகள் கடத்தல் வழக்கில் ரங்கராஜன் நரசிம்மன் கைது செய்யப்பட்டு சொந்த ஜாமினில் விடுவிப்பு!

in Society / Social Cause

ஸ்ரீரங்கம் கோயிலில் பல முறைகேடுகள் நடைபெறுவதாக சமூக வலைதளங்கள் வாயிலாக பல்வேறு தகவல்களை தெரிவித்து வந்த ரங்கராஜன் நரசிம்மன், அவதூறு செய்திகளை பரப்பியதாக கைது செய்யப்பட்டு, சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத ஸ்வாமி கோயிலில் நடைபெறும் முறைகேடுகள், சிலை கடத்தல்கள், சட்டவிரோதமாக இருக்கும் அறங்காவலர் குழு தலைவர், மத சடங்குகளில் அறநிலையத்துறையின் தலையீடு என்பன உள்ளிட்ட பல விவகாரங்களை கடந்த 4 ஆண்டுகளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டப்போராட்டத்தின் மூலம் வெளிக்கொண்டு வருபவர் ரங்கராஜன் நரசிம்மன்.

வழக்குகள் புகார்கள் குறித்த நிலைகளை, shri Rama Banam என்ற முகநூல் பக்கத்தில் ரங்கராஜன் நரசிம்மன் பொதுமக்களுடன் பகிர்ந்து வருகிறார். இவர் தொடுத்த சிலை கடத்தல் வழக்குகளில் மயிலை கபாலி கோயில் மயிலம்மன் சிலை களவும், ஸ்ரீரங்கம் உச்சவர் மற்றும் மூலவர் சிலை களவும் முக்கியமானவை.

மயிலை வழக்கில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஸ்ரீரங்கத்தில் தாக்கல் செய்யப்படாததால் நீதிமன்றத்தை அணுகி தன் புகாரில் போதிய முகாந்திரம் இருக்கின்றது என்பதை நிரூபித்து இவருக்கு சாதகமான தீர்ப்பை பெற்றார். அந்த தீர்ப்பில் நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி ஆதிகேசவலுவின் சிறப்பு அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியது.

நீதிமன்றம் நியமித்த சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் முதல் கட்ட விசாரணை நடத்தி ஸ்ரீரங்கத்தில் ரங்கராஜன் கொடுத்த புகாரில் முகாந்திரம் உள்ளது என்று அறிக்கை கொடுத்து முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல் ஆய்வாளாரிடம் கொடுக்க அவர் முதல் குற்றப்பத்திரிகையாக தாக்கல் செய்ய மறுத்ததாக கூறப்படுக்கிறது. இதுகுறித்து ரங்கராஜன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை தொடுத்தார்.

அதற்குள் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தஹில்ரமாணி சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து சிறப்பு அமர்வை கலைத்தார்.
அவர் ராஜினாமாவிற்கு பின் மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டால் அந்த தீர்ப்பு வழங்கிய நீதிபதியே விசாரிக்க வேண்டும் என்று 1.11.2019 அன்று பொறுப்பு நீதிபதி ஆணை பிறப்பித்ததால் தேங்கிக் கிடந்த வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு எப்பொழுது வேண்டுமானாலும் வரும் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், ரங்கராஜன் முகநூலில் அவதூறு பரப்புவதாக கூறி, அவர் மீது ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் புகார் கொடுக்க, இன்று அவர் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

மயிலாப்பூர் மயிலம்மன் வழக்கில் முக்கிய குற்றவாளியாக பிரபல தொழிலதிபரை ரங்கராஜன் நிறுத்தி அந்த வழக்கில் அந்த தொழிலதிபர் முன் ஜாமீன் பெற்றார். இப்பொழுது ஸ்ரீரங்கத்தின் வழக்கிலும் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நிலை வரும் என்பதை உணர்ந்து, அந்த தொழிலதிபர், இப்படி சட்டத்தை கையிலெடுத்து உண்மையாகப் சட்டத்தின்படி போராடும் ரங்கராஜன் நரசிம்மனை போலீஸ் கைது செய்துள்ளதாக, ரங்கராஜனுக்கு ஆதரவானவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரங்கராஜன் கைது செய்யபட்டபோது, கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல் என பல்வேறு சமூக ஆர்வலர்கள் ரங்கராஜனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ரங்கராஜன் நரசிம்மன், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது அது குறித்து கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடாது எனக் கூறி எச்சரிக்கை விடுத்து நீதிபதி ஜாமீன் வழங்கினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top