ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இப்படம் குறித்து பேசப்பட்டாலும், இப்படத்தில் நடித்த இவரை குறித்து யாரும் அதிகம் பேசவில்லை. பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை.
இந்த நிலையில், புடவையில் இருக்கும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, தனது பக்கம் அனைவரையும் இழுத்தார் ரம்யா பாண்டியன். இதனால், இவருக்கு படவாய்ப்பும், சில டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பும் வந்தது.
இந்த நிலையில், நடிகை ரம்யா பாண்டியன் பெயரில் ட்விட்டரில் ஆபாச படங்கள் வெளியானது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பலரை போலவே, ரம்யா பாண்டியனும் அதிர்ச்சியில் உறைந்தார். இதையடுத்து, தனது உண்மையான ட்விட்டர் மற்றும் இன்ஸ்டகிராம் கணக்கு குறித்த வீடியோ ஒன்றை ரம்யா பாண்டியன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
0 Comments