கொல்கத்தாவில் இன்று நடைபெறும் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை கண்டு ரசிக்க வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வருகிறார். இந்த போட்டியை காண வருமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று ஷேக் ஹசீனா வருகிறார்.
மேலும், பகலிரவு டெஸ்ட் போட்டியை காண பிரதமர் நரேந்திர மோடி, இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்கள் உள்ளிட்டோர் வருகின்றனர். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்தியா பங்கேற்கிறது.
0 Comments