குத்துச்சண்டை விளையாட்டுப்போட்டியின் போது எதிராளி விட்ட குத்தில் காயமடைந்த வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்..
அமெரிக்காவின் சிகாகோ நகரின் Wintrust Arenaவில் USBA Super-Welterweight தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில் கடந்த அக்டோபர் 12ம் தேதியன்று பாட்ரிக் டே மற்றும் சார்லஸ் கான்வெல் ஆகியோருக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.
இந்த ஆட்டத்தின் 10வது சுற்றில் பாட்ரிக் டேவை, எதிராளி சார்லஸ் கான்வெல் நாக் அவுட் செய்தார். கான்வெல் விட்ட சரமாரியான குத்துகளில் பாட்ரிக் டே நிலைகுழைந்து கீழே சாய்ந்தார்.. அவரது தலையில் குத்துகளை வாங்கியிருந்ததால் சுயநினைவை இழந்தார்.
இதன் காரணமாக நார்த் வெஸ்டர்ன் மெமோரியல் மருத்துவமனையில் பாட்ரிக் டே அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. மூளையில் காயம் ஏற்பட்டிருந்ததால் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் அவர் கோமா நிலைக்கு சென்றதுடன் 4 நாட்களாக அளித்து வந்த சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
பாட்ரிக் டே -வின் மரணம் அவரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் விளையாட்டு உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தொழில்முறை குத்துச்சண்டைக்கு வரும் முன்னதாக இவர் தேசிய அளவில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
0 Comments