பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் முதல் முச்சதம் அடித்து, பிராட்மேனின் சாதனையை முறியடித்துள்ளார்.
அடிலெயடில் நடைபெற்று வரும் 2ஆவது மற்றும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியின் இரண்டாம் ஆட்டத்தில் விளையாடிய டேவிட் வார்னர் 339 பந்துகளில் 37 பவுண்டரிகள் உடன் தனது முதல் முச்சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் அடித்த 7ஆவது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையையும் வார்னர் பெற்றார்.
இதையடுத்து, ஆஸி.,யின் முன்னாள் வீரர், ஜாம்பவான் பிராட்மேன் மற்றும் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் ஆகியோர் டெஸ்டில் 334 ரன்கள் அடித்திருந்ததே, தனி நபரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது வந்தது. 335 ரன்கள் எடுத்து இருவரின் சாதனையையும் வார்னர் முறியடித்தார். மேலும், அடிலெய்டில் பிராட்மேனின் 299 ரன்களான தனிநபரின் அதிகபட்ச ஸ்கோரையும் 300 அடித்து வார்னர் முறியடித்துள்ளார்.
0 Comments