வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று, தொடரையும் மிக எளிதாக கைப்பற்றியது.
கொல்கத்தாவில் பிங்க் பந்து வைத்து முதல் முறையாக நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசதை வென்றது. இதன் மூலம் வங்கதேசத்திற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடர முழுமையாக இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
2ஆவது டெஸ்ட் ஸ்கோர் விவரம்: வங்கதேசம் - 106, இந்தியா 347/9, வங்கதேசம் 195 ரன்களில் ஆல் அவுட்.
மேலும், தொடர்ச்சியாக 4 டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற முதல் அணி என்ற சாதனையையும் இந்திய அணி படைத்துள்ளது.
ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய இரண்டு விருதைகளையும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தட்டிச்சென்றார்.
0 Comments