பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களிடம் பணம் வாங்க மறுத்த இந்திய கார் டிரைவர்!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களிடம் பணம் வாங்க மறுத்த இந்திய கார் டிரைவர்!

in Entertainment / Sports

ஆஸ்திரேலியாவி ல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 29-ம் தேதி ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஏபிசி வானொலி தொகுப்பாளர் அலிசன் மிட்செல் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஜான்சனிடம் ஒரு சுவாரஷ்யமான சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் பாகிஸ்தான் வீரர்களான ஷாஹீன் ஷா அப்ரிடி, யாசிர் ஷா மற்றும் நசீம் ஷா ஆகியோர் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய ஓட்டல் ஒன்றிற்கு உணவருந்த சென்றுள்ளனர்.

ஓட்டல் வந்தடைந்ததும் கார் டிரைவராக இருந்த இந்தியருக்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பணம் கொடுத்தனர். அனால், கார் டிரைவரோ பணம் வாங்க மறுத்துள்ளார். உடனே அந்த வீரர்கள் தங்களுடன் உணவருந்துமாறு அந்த டிரைவரை விருந்துக்கு அழைத்து சென்று உள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஐந்து வீரர்களுடன் இந்திய டிரைவர் உணவகத்தின் மேஜையில் அமர்ந்திருந்த புகைப்படம் அவரது தொலைபேசியில் இருப்பதை காட்டினார்.

அலிசன் ஜான்சனிடம் கதை சொல்லும் வீடியோ உடனடியாக சமூக ஊடகங்களில் வைரலாகியது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top