வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலி தலைமையிலான அணியில் ரோகித் சர்மா, தவான், ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் , மணீஷ் பாண்டே, ரிஷாப் பந்த், ஷிவம் துபே, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சஹால், குல்தீப் யாதவ், முகமத் ஷமி, புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ள கேதர் ஜாதவ் டி20 அணியில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த வாசிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். 3 டி20, 3 ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த மாதம் இந்தியா வருகிறது. முதல் டி20 போட்டி மும்பையில் டிசம்பர் 6ஆம் தேதியும், முதல் ஒருநாள் போட்டி சென்னையில் டிசம்பர் 15ஆம் தேதியும் நடைபெறுகிறது.
0 Comments