வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரை ஒயிட்வாஷ் செய்தது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரை ஒயிட்வாஷ் செய்தது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

in Entertainment / Sports

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்றது. இதில், முதல் 4 போட்டிகளில் இந்திய மகளிர் அணி அசத்தல் வெற்றி பெற்ற நிலையில், 5 வது மற்றும் இறுதி 20 ஓவர் கிரிக்கெட் நேற்று நடைபெற்றது.

இதில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு வெறும் 73 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 61 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி,விளையாடிய 5 போட்டிகளிலும் வென்று மேற்கு இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்தது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top