பார்முலா 1 : இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் 6-வது முறையாக ‘சாம்பியன்!’

பார்முலா 1 : இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் 6-வது முறையாக ‘சாம்பியன்!’

in Entertainment / Sports

கார் பந்தயங்களில் மிகவும் பிரபலமானது பார்முலா 1 பந்தயமாகும். இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார் பந்தயம் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.

இந்த போட்டியின் 19-வது சுற்றான அமெரிக்க கிராண்ட்பிரி போட்டி அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் நடந்தது. 308.405 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த பந்தயத்தில் பின்லாந்து வீரர் வால்ட்டெரி போட்டஸ் (மெர்சிடஸ் அணி) 1 மணி 33 நிமிடம் 55.653 வினாடியில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்தார். இந்த சீசனில் அவர் பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். அவருக்கு 25 புள்ளிகள் கிடைத்தது. இந்த பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 2-வது இடத்தை பிடித்து 18 புள்ளிகள் பெற்றார். நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பென் (ரெட்புல் அணி) 3-வது இடத்தை பிடித்து 15 புள்ளிகளை தனதாக்கினார்.

இந்த பந்தயத்தில் 2-வது இடத்தை பிடித்த லீவிஸ் ஹாமில்டன் இந்த ஆண்டுக்கான பார்முலா1 பட்டத்தை தனதாக்கினார். அவர் மொத்தம் 381 புள்ளிகள் குவித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள வால்ட்டெரி போட்டஸ் 314 புள்ளிகள் பெற்றுள்ளார். இன்னும் 2 சுற்றுகள் மட்டுமே எஞ்சி இருக்கும் நிலையில் . இந்த சுற்றுகளின் முடிவு போட்டியில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

இதனால் 34 வயதான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் 6-வது முறையாக கிராண்ட் ப்ரி பட்டம் வென்றுள்ளார். அத்துடன் அவர் தொடர்ந்து 3 ஆண்டுகளாக பட்டம் வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்துள்ளார். இந்த சீசனில் 10 சுற்றுகளில் வெற்றிகளை குவித்த ஹாமில்டன் 2008, 2014, 2015, 2017, 2018-ம் ஆண்டுகளில் பார்முலா1 பட்டத்தை வென்று இருந்தார்.

ஜெர்மனியை சேர்ந்த மைக்கேல் சூமாக்கர் 7 முறை பார்முலா1 பட்டத்தை வென்றதே அதிகபட்சமாகும். அதற்கு அடுத்த இடத்தில் ஹாமில்டன் உள்ளார். இன்னும் ஒரு முறை ஹாமில்டன் பட்டம் வென்றால் சூமாக்கரின் சாதனையை சமன் செய்து விடுவார். இந்த போட்டியின் 20-வது சுற்று பிரேசிலில் வருகிற 17-ந் தேதி நடக்கிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top