போட்டியில் தோற்ற வீராங்கனையிடம் கைகுலுக்க மறுத்த மேரிகோம்!

போட்டியில் தோற்ற வீராங்கனையிடம் கைகுலுக்க மறுத்த மேரிகோம்!

in Entertainment / Sports

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் 6 முறை தங்கப்பதக்கம் வென்றவர் மேரிகோம். இவர் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் நேரடியாக எந்த போட்டியும் இன்றி தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக, ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றில் சகவீரர் நிகாத் ஐரீனுடன் மோத இருந்தார். ஆனால், போட்டி ரத்து செய்யப்பட்டு மேரி கோம் இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் போட்டியிட தேர்வானார்.

இதனால் ஏமாற்றமடைந்த நிகாத் ஐரீன் ஊடகங்களிடம் முறையிட்டு அந்த போட்டியை நடத்த வைத்தார். ஆனால் போட்டியில் மேரி கோம் வெற்றி பெற்றார். வெற்றிக்குப் பிறகு தன்னிடம் கைகுலுக்க வந்த நிகாத்தோடு கை குலுக்காமல் அவர் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இது குறித்து பேசிய மேரி கோம் 'நான் ஏன் அவருடன் கைகுலுக்க வேண்டும்? என கேள்வி எழுப்பியதோடு, அவரை ஒருவர் மதிக்க வேண்டும் என்றால், அவரும் மற்றவரை மதிக்கவேண்டும். களத்தில் வந்துதான் நீங்கள் உங்களை நிரூபிக்க வேண்டும். களத்துக்கு வெளியே அல்ல.' எனத் தெரிவித்துள்ளார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top