வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் தவான் விலகல்; மயங்க் அகர்வால் அணியில் சேர்ப்பு!

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் தவான் விலகல்; மயங்க் அகர்வால் அணியில் சேர்ப்பு!

in Entertainment / Sports

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டி தொடரில் பங்கேற்கிறது. இதில், டி20 போட்டிகள் முதலில் நடந்தன. இதுவரை நடந்த முதல் இரு போட்டிகளில் இரண்டு அணிகளும் தல ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.

இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கிறது.

இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையே 3 ஒரு நாள் போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் ஒரு நாள் போட்டி சென்னையில் வருகிற 15ந்தேதி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து, வருகிற 18ந்தேதி 2வது போட்டியும், 22ந்தேதி 3வது போட்டியும் நடைபெறும். இந்த போட்டி தொடரில் இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் காயத்தினால் அணியில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டு உள்ளார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top