ரோஹித் அதிரடி ஆட்டம் : இந்திய அணி அபார வெற்றி!

ரோஹித் அதிரடி ஆட்டம் : இந்திய அணி அபார வெற்றி!

in Entertainment / Sports

வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிராக ராஜ்கோட்டில் நடந்த 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில், முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 154 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய தவான், ரோகித் சர்மா வங்கதேச பவுலர்களின் பந்துவீச்சை ஆரம்பம் முதலே அடித்து நொறுக்கினர். குறிப்பாக தனது 100ஆவது டி20 போட்டியில் விளையாடிய ரோகித் ஆரம்பமே அதிரடியாக ஆடி (18ஆவது) அரைசதம் அடித்ததால், இந்தியா வெற்றி இலக்கை நோக்கி சுலபமாக சென்றது.

இந்த கூட்டணி 10 ஓவர்களுக்குள் 100 ரன்களை கடந்து ஆடி வந்த நிலையில், தவான் 31 ரன்களில் அமினுல் இஸ்லாம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அப்போது, அணியின் ஸ்கோர் 118 ஆக இருந்தது. இதன்பின் சிறிது நேரத்திலேயே ரோகித்தும் வெளியேறினார்.

இதன்பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர், ராகுல் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா, 15.4 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. அதிகபட்சமாக ரோகித் 43 பந்துகளில் 85 ரன்கள் அடித்தார். இதில், 6 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும்.

இந்த வெற்றியின் மூன்று போட்டிகள் டி20 தொடரில் இரண்டு அணிகளும் 1-1 என்று சம நிலையில் உள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top