உலகின் தற்போதைய சிறந்த பந்துவீச்சாளர் ஷமி: டேல் ஸ்டெயின்!

உலகின் தற்போதைய சிறந்த பந்துவீச்சாளர் ஷமி: டேல் ஸ்டெயின்!

in Entertainment / Sports

உலகின் சிறந்த வேக பந்துவீச்சாளாராக தற்போது இந்தியாவின் முகமத் ஷமி உள்ளார் என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளார் டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.

சமூகவலைத்தலமான ட்விட்டரில் ரசிகர்களுடன் ஸ்டெயின் உரையாடினார். அப்போது, ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் அவர் பதில் அளித்தார். உரையாடலின்போது ரசிகர் ஒருவர், தற்போது, உலகின் சிறந்த பந்துவீச்சாளர் யார் என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு, சிறிது நேரம் எடுத்துக்கொண்ட ஸ்டெயின், இந்தியாவின் முகமத் ஷமி என்று பதில் அளித்தார்.வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஷமி 7 விக்கெட்டுகளை கைப்பற்றிக்கு உறுதுணையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஸ்டெயினிடம் உங்களின் ஆல்டைம் ஸ்பின்னர் என்ற கேள்விக்கு, ஷேன் வார்னே, பால் ஹாரிஸ் என்றும், ஆல்டைம் பேட்ஸ்மேன் என்ற கேள்விக்கு, காலிஸ் என்று தங்களுடைய அணியின் முன்னாள் வீரர் பெயரையும் குறிப்பிட்டிருந்தார்

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top