சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி; ஸ்ரீகாந்த், சவுரப் காலிறுதிக்கு முன்னேற்றம்!

சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி; ஸ்ரீகாந்த், சவுரப் காலிறுதிக்கு முன்னேற்றம்!

in Entertainment / Sports

உத்தர பிரதேசத்தின், லக்னோ நகரில் பாபு பனாரசி தாஸ் மைதானத்தில் சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் முன்னாள் சாம்பியனான கிதம்பி ஸ்ரீகாந்த் மற்றும் சக வீரர் பருப்பள்ளி காஷ்யப் விளையாடிய போட்டி ஒன்றில் 18-21, 22-20, 21-16 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு ஸ்ரீகாந்த் முன்னேறியுள்ளார்.

இதேபோன்று மற்றொரு போட்டியில், சவுரப் வர்மா சக வீரரான ஆலப் மிஷ்ராவை 21-11, 21-18 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவில் சுருதி முண்டடா மற்றும் ரீதுபர்ணா தாஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

ஆனால், துரதிஷ்டிரவசமமாக, இளம் வீரரான லக்சயா சென் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இருந்து தோற்று வெளியேறினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top