வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிய புயல் ஓன்று உருவாகியுள்ளதாகவும், அதற்கு ‘புல்புல்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் படிப்படியாக வலுப்பெற்று வங்கக்கடலின் வடமேற்கு திசையில் மேற்கு வங்காளம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா மற்றும் பங்களாதேஷ் கடற்கரைகளை நோக்கி நகரும் என்று எதிர்பார்ப்பதாகவும், வங்கதேசத்தை ஒட்டி கரையை கடப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும், இந்த புயலால், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவிற்கு செல்ல வேண்டாம் என்றும் மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அதிதீவிர புயலான மஹா, அதிகாலை குஜராத்தில் டையூ - போர்பந்தர் இடையே கரையை கடக்கும் என்றும், இருப்பினும் முன்பு கணிக்கப்பட்டதைக் காட்டிலும் குறைவான வேகத்தில் குஜராத்தை தாக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
0 Comments