சென்னையில் காற்று மாசு - புல்புல் புயலால் குறையலாம் என எதிர்பார்ப்பு!!

சென்னையில் காற்று மாசு - புல்புல் புயலால் குறையலாம் என எதிர்பார்ப்பு!!

in News / Weather

இந்தியாவின் தலைநகரமான டெல்லியை தொடர்ந்து, தற்போது தமிழகத்தின் தலைநகரான சென்னையிலும் காற்று மாசு அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . இந்த நிலையில், வங்கக்கடலில் ஏற்பட்டிருக்கும் புல்புல் புயலால் மாசு குறையலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமீபகாலமாக இந்திய தலைநகர் டெல்லியை ஓர் உலுக்கு உலுக்கிய காற்று மாசு, தற்போது சென்னைக்கும் படி படியாக வந்து விட்டது. பொதுவாக காற்றின் தரத்தை அளவிட உதவும் காற்று தரக் குறீயீடு, 0-50 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் அது "நல்லது" என்ற தரத்தில் விழுகிறது, 51-100 புள்ளிகள் இருந்தால் "நிறைவு", 101-200 புள்ளிகள் "மிதமானது", 201-300 புள்ளிகள் "மோசம்" 301-400 புள்ளிகள் "மிக மோசம்", 401-500 புள்ளிகள் மிகத்தீவிரம், 500 புள்ளிகளை கடந்துவிட்டால் "நெருக்கடி" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இதை தொடர்ந்து, டெல்லியின் காற்று மாசு 600 புள்ளிகளை தொட்டுவிட்ட நிலையில், சென்னையின் தற்போதைய காற்று மாசு அளவுக் குறியீடு 300, அதாவது மிக மோசமான நிலையை எட்டி உள்ளது.

எனினும், தற்போது வங்கக்கடலில் உருவாகியிருக்கும் புல்புல் புயல் வடக்கி நோக்கி நகரும் பொது பெய்யும் மழை, காற்றில் உள்ள மாசுக்களை இழுத்துச் சென்றுவிடும் என்று எதிர்பார்க்கபடுவதால் சென்னையில் காற்று மாசு குறையும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top