பனைமரங்கள் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில்

பனைமரங்கள் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில்

in News / Local

பனைமரங்கள் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் இப்போது பனை மரங்களை பார்ப்பது ஆபூர்வமான நிகழ்வாக மாறி இருக்கிறது , ஆனால் அதன் அருமை அறிந்தால் அதை யாரும் முறிக்க விட மாட்டார்கள் , பனைமரம் தான் மட்டும் வளராது இன்னொரு மற்ற மரங்கள் அதாவது குறிப்பாக சுற்றுச்சூழலுக்கு பல்லுயிர் தன்மைக்கு மிக முக்கியமான ஆலமரம் ,அரசமரம் போன்ற மிக பிரம்மாண்டமான மரங்கள் வளர சுற்றுச்சூழலுக்கு மிகவும் உதவுகிறது பனைமரம் , இன்றைய காட்சி நாம் மேற்கு கடற்கரை பகுதியில் மூள்ளூர்துறை அருகே வானிலை குறித்து ஆய்வு செய்ய சென்ற நேரத்தில் மேற்கு கடற்கரை சாலை மணவாளக்குறிச்சி வள்ளியாற்று பாலம் அருகே மேற்கு கடற்கரை சாலை அருகே நிற்கும் பனை மரத்தின் இருந்து ஒரு ஆலமரம் வளர்ச்சி அடைந்து விழுது அடித்து வருவதை கண்டு அதை புகைப்படம் எடுத்தோம் ,ஏற்கனவே நாகர்கோவில் பகுதியில் இதே போல கண்ட ஒரு காட்சியை இதற்கு முன்பு பதியவிட்டு இருந்தோம் , இது இன்றைய காட்சி இதனால் தான் நண்பர்களே பனை மரங்களை பாதுகாப்போம் நாம் ஆலமரம் ,அரச மர விதைகளை விதைத்தால் கூட முளைக்காது ஆனால் பறவைகள் அதை உண்டு எச்சமாக போடும் போது அது முளைக்கும் தன்மை வந்து முளைத்து விடுகிறது , நமது கன்னியாகுமரி மாவட்டத்தின் இயற்கை காலநிலைக்கு மரங்களின் வளர்ச்சி சமவெளி பகுதியில் சிறப்பாக இருக்கும் சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவமான ஆலமரம் ,அரச மரங்களை தாங்கி வளரும் பனை மரங்களின் பல்லுயிர் தன்மை மிக சிறப்பு கேரளாவில் கூட இதனால் தான் பனைமரங்களை பாதுகாக்க அங்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது! இதனால் பனை மரங்களை பாதுகாப்போம் இன்றைய காட்சி :- 15-09-2023 மேற்கு கடற்கரை சாலை மணவாளக்குறிச்சி வள்ளியாற்று பாலம் அருகே சாலையோரத்தில் நிற்கும் பனை மரத்தை தாங்கி வளரும் ஆலமரம்

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top