Nagercoil & Kanyakumari News | Kanyakumari Magazine | Recent Updates of Kanyakumari | Kanyakumari Memes | Latest International & National News |

விவரம் அறியாத வயதில் காதலித்து திருமணம் : பாய்ந்த போக்சோ; சிதைந்து போன திருமண வாழ்க்கை!

Published on in News / National by Admin

மதுரையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதி தற்கொலை செய்து கொள்ள முயன்றதில் மனைவி இறந்து போனார். கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மதுரை ஜீவா நகர் பகுதியில் உள்ள லட்சுமிபுரம் தெருவில் பாலகிருஷ்ணன், உமாதேவி தம்பதி வசித்து வந்தனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையை சேர்ந்த இவர்கள் இருவரும் 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். கார்பென்டராக வேலை பார்த்து வந்த பாலகிருஷ்ணன் உமாதேவி 16 வயதாக இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால், போக்சோ சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பின்னர், உமாதேவிக்கு 18 வயதான பின்னர் இரு வீட்டாரும் சேர்ந்து பேசி காதல் ஜோடியை சேர்த்து வைத்துள்ளனர்.

தொடர்ந்து, 5 மாதங்களுக்கு முன்பு மதுரையில் குடியேறியுள்ளனர். இந்த நிலையில், சில தினங்களாக தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றிரவும் இரண்டு பேரும் சண்டையிட்டுள்ளனர். இதனால், மனவேதனை அடைந்த உமாதேவி கணவர் உறங்கிக் கொண்டிருந்த போது தூக்கு மாட்டி கொண்டு இறந்து போனார். பால கிருஷ்ணன் கண் விழித்து பார்த்த போது, மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வேதனையில் தன் கழுத்தில் உளியால் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஜெய்ஹிந்புரம் போலீசார் உமா தேவியின் பிரேதத்தை கைப்பற்றி உடல்கூராய்வுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விவரம் தெரியாத வயதில் திருமணம் செய்து வைத்து, புரிதல் இல்லாமல் அடிக்கடி கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதால், உமாதேவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

.

Keep Reading

எந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும். எதிர்ப்பு சக்தியில் முதலிடம் இந்த முருங்கை

Published on in Society / Health

🌿நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால் எந்த வைரஸும் நம்மை ஒன்றும் செய்ய இயலாது.

🌿நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள என்னவெல்லாம் சாப்பிடலாம் என பெரிய லிஸ்ட் போட்டு யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை.

🌿பத்து ரூபாய்க்கு கிடைக்கும் முருங்கைகீரை அல்லது இரண்டு முருங்கைக்காய் போதும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை உபயோகித்தால், நாம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு உயர்த்திக் கொள்ளலாம்.

🌿முருங்கையில் வைட்டமின் C ஆனது ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதை விட 7 மடங்கு அதிகமாக உள்ளது.

🌿முருங்கையில் வைட்டமின் A ஆனது கேரட்-ல் உள்ளதை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது.

🌿முருங்கையில் வைட்டமின் B2 ஆனது வாழைப்பழத்தில் உள்ளதை விட 50 மடங்கு அதிகமாக உள்ளது.

🌿வைட்டமின் B3 ஆனது வேர்க்கடலையில் உள்ளதை விட 50 மடங்கு அதிகமாக
உள்ளது.

🌿முருங்கையில் கால்சியம் சத்து பாலில் உள்ளதை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது.

🌿முருங்கையில் புரோடீன்(புரத) சத்து பாலில் உள்ளதை .

Keep Reading

திருநெல்வேலி இருட்டு கடை அல்வா

Published on in Travel and Tourism / Food and Culture

தமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கென்று ஒரு சிறப்பம்சம் உண்டு எனினும் ஊரு பெயரை சொன்னதுமே வேறு எதைக்காட்டிலும் அந்த ஊரின் ஸ்பெஷல் உணவு நினைவுக்கு வருவதென்னவோ திருநெல்வேலிக்குத்தான். பாய்ந்தோடும் தாமிரபரணி, நெல்லையப்பர் கோயில் என்று பல சிறப்புகள் திருநெல்வேலிக்கு இருந்தாலும் நம் நினைவுக்கு வருவதென்னவோ இருட்டுக்கடை அல்வா தான். வெளியூரிலிருந்து அந்த வழியாக போகும் பேருந்துகள் அனைத்தும் இங்கே நிற்காமல் போவது இல்லை, இருட்டு கடை அல்வாவின் அருமையான எச்சில் ஊரும் சுவையே இதற்கு காரணம். இவ்வளவு பிரபலமான திருநெல்வேலி அல்வா எப்படி வந்தது என்று உங்களுக்கு தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள்.

1930 - 1940 களில் ராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவர் துவங்கி அதன் பின் கிருஷ்ணசிங் மற்றும் அவருடன் இணைந்து அடுத்த தலைமுறையை சேர்ந்தவர்கள் நடத்தி வருகிறார்கள். இருட்டுக்கடை அல்வா விற்பனை மற்ற கடைகளை போல முழு நேர விற்பனை கிடையாது. .

Keep Reading

உங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்! வெளியான அதிர்ச்சி தகவல்!

Published on in Technology /Apps
உங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்! வெளியான அதிர்ச்சி தகவல்!

ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள், தங்களது இருப்பிடம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள முடியாதபடி, செயலியை அணைத்து வைத்தாலும் கூட, அதனை மூன்று வழிகளில் கண்டறிவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க செனட் சபையின் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பேஸ்புக் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராப் ஷெர்மென் கடிதம் மூலம் பதில் அளித்துள்ளார். அதில், விளம்பரங்களை மூலம், வருவாய் ஈட்டுவதற்காக ஸ்புக் தனது பயன்பாட்டாளர்களின் இருப்பிடத்தை அறிந்து அதற்கேற்ப விளம்பரம் வெளியிடுவதாக தெரிவித்துள்ளது. இதற்காக, முதலாவதாக கணிப்பொறி இருக்கும் இடத்தை அதன் செயலி மூலம் கண்டறிவதாகவும், பல நேரங்களில் செயலி அணைத்து வைக்கப்படுவதால், அவர்கள் பயன்படுத்தும் கணினியின் ஐபி முகவரியை வைத்து இடத்தை கண்டறிவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Keep Reading

×
Newsletter
Find the best Events, Food Joints, Fashion Outlets, Neighbors & the Nagercoil Neighborhood everyday!
Subscribe
Go to Top