பூங்கனி - காலம் மறந்த கவிதை

வெளியிடப்பட்ட நாள் இல் சமூகம் / கலை மற்றும் கலாச்சாரம் மூலம் Team CafeKK

காலம் கனிந்திருத்தல் பூங்கனி இனிய குரல்கனிய இன்னும் ஊராக உரக்க கேட்டு ரசித்து கொண்டிருந்திருப்போம். ஆனால் "இனி அது சாத்தியமில்லை," என தன் நிலையுணர்ந்து காலத்தின் கருவை விளக்குகிறார் பூங்கனி. "குரலை இழந்திடேன். பலம் எல்லாம் போச்சு. வயசாச்சில்ல?"

எண்பது மூன்று வயதாகும் பூங்கனிக்கு கம்பூன்றி நடந்து திரிவதே சிரமம் தான். ஆதரவுக்கு ஆளின்றி தனிமையின் துணையில் தவிக்கிறார். இரண்டு அறை கொண்ட தன் வீட்டின் சமையல் அறையில் தானக சமைக்கிறார். ரேஷன் அரிசி தான்.

“பெலன் இருந்தப்ப அவரு கூட ஒரு நாளைக்கு 2,3 ன்னு கச்சேரி பாடினேன். நான் கட்டையை கிரக்கிறது மாதிரி வேற யாரும் கிரக நான் பாக்கல. அது போல,நான் பாடி திரிந்த காலத்தில விரல் விட்டு என்னுற மாதிரி 3,4 பெண்கள் தன் வில்லுப்பாட்டு பாடினாங்க. அந்த காலத்தில 40, 50 வருஷம் முன்னால, அதுவே பெரிய மவுசு தான்!"

"பத்து ரூபா பதினஞ்சு ரூபா சம்பளம் வாங்கின ஆம்பிள்ளைங்க மத்தில இருபது ரூபா சம்பளம் எனக்கு. மாட்டு வண்டியில இல்ல அம்பாசடர்ல தூத்துக்குடி, திருநெல்வேலி, சங்கரன்கோவில்ன்னு ஒரு கோவில் விடாம பாடியிருக்கேன். அது அந்த காலம். இப்ப அவரும் இல்ல பாட்டும் இல்ல. கடவுள் வரஞ்ச கோட்டை தாண்ட முடியதில்லா? எதோ ஓவொரு நாளும் ஏப்படியோ ஓடிட்டுயிருக்கு…. அவன் வச்ச நாள் வர!"

"கோவில் கொடை பூங்கனி இல்லாம பூரணமடையதுன்னு என் காது பட கேட்டிருக்கேன். அனால் என்ன செய்ய? மக்கள் தந்த கௌரவம் அரசிடமிருந்து கிடைக்கவில்லையே! "

அகஸ்தீஸ்வரத்தை (கன்னியாகுமாரி) அடுத்த சரவணஞ்சேரி என்ற சிறிய கிராமத்தில் பிறந்த பூங்கனிக்கு 4 சகோதிரசகோதிரிகள். பூங்கனி கடைக்குட்டி. அப்பாவின் செல்ல பிள்ளை. "10,11 வயதிருக்கும் போது பக்கத்துக்கு ஊர் கோவில் கொடைக்கு போனப்பம் தான் .

மேலும் படிக்க

ஓகி நிவாரணம் வழங்க கோரி போராட்டம்!

வெளியிடப்பட்ட நாள் இல் செய்திகள் / உள்ளூர் செய்திகள்

'நாம் குமரி மக்கள் என்ற சமூக இயக்கம் ஒக்கி புயல் சிதைத்த குமரி மக்களுக்கு நிவாரணத் திட்டங்கள் கேட்டு இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தியது. முகப்புரை நிகழ்த்தி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்த 'நாம் குமரி மக்கள்' அமைப்பின் நிறுவனர் அருட்திரு. ஜெகத் கஸ்பார், "கல்வி, உடல்நலம், பொருளாதாரத் தன்னிறைவு என அனைத்து மனித வளர்ச்சிக் குறியீடுகளிலும் நாட்டுக்கே முன்மாதிரியாக வளர்ந்துவந்த நம் மாவட்டத்தை இடைமறித்துள்ளது. 50 லட்சம் வாழைகள் இழப்பு 80 சதம் சிறு-குறு விவசாயத் தொழில் முனைவோரை அன்றாடக் கூலிகளாக்கி வீழ்த்தியிருக்கிறது; இருபது லட்சத்துக்கும் மேலான ரப்பர் மரங்கள் இழப்பு பல்லாயிரம் குடும்பங்களது வாழ்வாதாரங்களையும் தற்சார்பு பொருளாதார அடிப்படைகளையும் தகர்த்துள்ளது. படகுகள் இழந்த மீனவர்களின் வாழ்க்கை நடைபிணங்கள் போல் நிற்கிறது. 45 லட்சம் தென்னை, பல்லாயிரம் ஹெக்டேர் நெல், மரவள்ளி, வாசனைப்பயிர்கள், மற்றும் பூந்தோட்டங்கள்,பல லட்சம் பழமரங்கள் என விவசாய .

மேலும் படிக்க

வெளியிடப்பட்ட நாள் இல் /

.

வெளியிடப்பட்ட நாள் இல் /

×
செய்திமடல்
Find the best Events, Food Joints, Fashion Outlets, Neighbors & the Nagercoil Neighborhood everyday!
மேலே செல்ல