ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள், தங்களது இருப்பிடம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள முடியாதபடி, செயலியை அணைத்து வைத்தாலும் கூட, அதனை மூன்று வழிகளில் கண்டறிவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க செனட் சபையின் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பேஸ்புக் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராப் ஷெர்மென் கடிதம் மூலம் பதில் அளித்துள்ளார். அதில், விளம்பரங்களை மூலம், வருவாய் ஈட்டுவதற்காக ஸ்புக் தனது பயன்பாட்டாளர்களின் இருப்பிடத்தை அறிந்து அதற்கேற்ப விளம்பரம் வெளியிடுவதாக தெரிவித்துள்ளது. இதற்காக, முதலாவதாக கணிப்பொறி இருக்கும் இடத்தை அதன் செயலி மூலம் கண்டறிவதாகவும், பல நேரங்களில் செயலி அணைத்து வைக்கப்படுவதால், அவர்கள் பயன்படுத்தும் கணினியின் ஐபி முகவரியை வைத்து இடத்தை கண்டறிவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
0 Comments