பயனாளர்களால் எளிதில் கண்டுபிடிக்க முடியாத ஸ்ராண்ட் ஹாக் எனும் மிகக் கொடிய வைரஸ் ஆண்ட்ராய்டு பயனாளர்களைத் தாக்கி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலத்திற்கும் எச்சரிக்கை அனுப்புயுள்ளது.
இந்த வைரஸ் எல்லா வகையான ஆண்ட்ராய்ட் வெர்ஷன்களிலும் ஏன் ஆண்ட்ராய்ட் 10 வெர்ஷனையும் விட்டு வைக்கவில்லை. தற்போது இந்த வைரஸின் பாதிப்பு தங்களது மொபைல் போன்களில் இருக்கிறதா என்பதைக் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இந்த வைரஸ் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இணையத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது வருகிற பாப் அப் மெஜேஜ், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் தான் இந்த ஆபத்தான வைரஸ் உள்நுழைவதற்கான மிக முக்கியமான காரணமாக அமைகிறது.
ஸ்ராண்ட் ஹாக் வைரஸ் உள்நுழைந்தவுடன் ஏற்கனவே உள்நுழைந்திருக்கிற(லாகின்) ஆப்களை மீண்டும் லாகின் செய்யுமாறு ஒரு போலியான திரையை உண்டாக்கும். ஒருவேளை நீங்கள் மீண்டும் அதில் லாகின் செய்யும் பட்சத்தில் உங்கள் செல்போனை ஹேக்கர்கள் ஹேக் செய்துவிடுகிறார்கள்.
ஹேக் செய்யப்பட்ட போனில் முதலில் மைக்கை தான் ஹேக் செய்கிறார்கள். இதன்மூலம் உங்களது உரையாடல்களை ஒட்டுக் கேட்கிறார்கள். அதன்பின் படிபடியாக உங்களது கேமரா, கேலரி, என அலைபேசியின் அனைத்து தகவல்களையும் திருடிவிடுகிறார்கள் என மத்திய அமைச்சகத்திற்கு சைபர் அச்சுறுத்தல் பிரிவிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருக்கிறது.
இதனால் மத்திய அரசு நாட்டில் உள்ள அனைத்து காவல் உயரதிகாரிகளுக்கும், இந்த வைரஸ் குறித்த தகவல்களை அனுப்பி வைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பொதுமக்களுக்கு இந்த வைரஸின் ஆபத்தை உணர்த்தி விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு காவல்துறை உயரதிகாரிகளுக்கும், இணையக் குற்றப்பிரிவுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
0 Comments