தமிழகத்தில் இளைஞர்களுக்கு பைக் என்பது மிகப்பெரிய ஒரு கனவாக தான் இருக்கிறது. அதுவும் மிடில் கிளாஸ் இளைஞர்களுக்கு பெருங்கனவு. சொந்த பைக்கை கையில் தொடுவதற்காக வரம் இருப்பவர்களுக்குத் தான் அதனுடைய அருமை தெரியும்.ஊருக்குள் யாரும் வைத்திருக்காத பைக்கை வாங்கி அதை ஊர்த் தெரு முழுக்க ஒரு சுற்று சுற்றி வந்தாலே அவர்கள் பிறந்ததற்கான பயனை அடைந்து விட்டது போல இன்றைய கால இளைஞர்கள் நினைக்கிறார்கள்.
இளைஞர்களில் எண்ண ஓட்டத்திற்கு ஏற்றவாறு பைக் உற்பத்தி கம்பெனிகளும் தங்களை அப்டேட் செய்து புதுவகை பைக்குளை சந்தையில் இறக்கி வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் நடந்த ஹோண்டா கம்பெனியின் எக்ஸ்போவில் ஹோண்டோ கோல்டு விங் என்ற புதுவகை பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரிவர்ஸ் கியர் வசதி கொண்ட இந்த பைக் ஏறக்குறைய காருக்கு இருக்கிற எல்லா அம்சங்களையும் கொண்டுள்ளது. அது மட்டுமில்லாமல் ஆப்பில் கார் பிளே வசதி, ஏர் பேக் வசதி மற்றும் படம் பார்த்துக் கொண்டே பைக்கை ஓட்டி செல்லும் அளவுக்கு எல்.இ.டி ஸ்கிரினும் இந்த பைக்கில் இடம் பெற்றிருக்கிறது.
தென்காசியில் ஒருவர் இந்த பைக்கை பதிவு செய்து நம்பர் பிளேட்டிற்கான எண் வாங்குவதற்காக ஆர்டிஓ அலுவலகத்திற்கு வந்திருக்கிறார். 1 கோடி மதிப்பிலான பைக்கை பொதுமக்களுடன் ஆர்டிஓ அதிகாரிகள் வியந்து பார்த்தனர்.
0 Comments