வீட்டில் மின் பாதுகாப்பு வழி முறைகள்
i)எர்த் லீக்கேஜ் சர்குட் பிரேக்கர் ஒவ்வொரு வீட்டிற்கும் அவசியம்; செலவு பாராமல் வைக்க வேண்டும்.
ii)வீட்டிலுள்ள வீனாய் போயுள்ள, பழைய சுவிச்சுகளை அவசியம் மாற்றிவிட வேண்டும்.தரமான சுவிச்களை வாங்கிப் பொருத்த வேண்டும்.
iii)தண்ணீர் ஏற்ற வைத்துள்ள மோட்டர் சுவிச் போர்ட்,வாஷிங் மிஷின்,ஃபிரிட்ஜ் கீழே ரப்பர் மேட் போட்டுக் கொள்வது பாதுகாப்பானது.
iv)எந்த சுவிட்சை இயக்கும் போதும் இடது கையை பின்புறத்தில் கட்டிக் கொண்டு,
வலது கை சுட்டு விரலால் மட்டுமே இயக்க வேண்டும்,இதயம் இடது புறத்தில் உள்ளதால்.
v)பாத் ரூம் சுவிச் போர்டின் மேல் ஒரு பழைய டூத் பிரஷ் வைத்துக் கொண்டு,அதனால் சுவிட்சைப் போடுவதே பாதுகாப்பானது.
vi)மழைக் காலம் வாட்டர் ஹீட்டர் அடிக்கடி பயன்படுத்த வேண்டியிருப்பதால்,
அதன் விஷயத்தில் மிகவும் சாக்கிரதையாக இருக்க வேண்டும்.மும்பையில்,
ஒரு நடிகை ஹீட்டர் நீரில் குளிக்கும் போது, மின் ஷாக் அடித்து இறந்து போனது அறிந்திருப்போம்.
தண்ணீர் இல்லாததால்,ஹீட்டர் எலிமெண்ட் உருகி, மின்சாரம் பாய்ந்து,அந்த நடிகை இறந்து போயிருக்கிறார்.
ஹீட்டருக்கு கொடுக்க கூடிய
இன்லெட், அவுட்லெட் ஏதும் மாறவே கூடாது.
எதிலும் கண்ட்ரோல் வால்வ் வைத்துவிடக் கூடாது.
அவுட்லெட் ,ஹாட் வாட்டர் டேப் வழியாக தண்ணீர் வருவதை உறுதி செய்து கொண்ட பின்னரே,
ஹீட்டர் சுவிட்சை ஆன் பண்ண வேண்டும்.
ELCB இம்மாதிரி சமயங்களில் நம்மைக் காப்பாற்றும்.
ஹீட்டர் சுவிச்சை டவல்/துடைக்கும் துண்டை வைத்து ஆஃப் செய்தால் ஈரக்கையோடு சுவிச்சை தொடுவதிலிருந்து தப்பித்து விடலாம்.
vii)பொதுவாக வாட்டர் ஹீட்டருக்கு சாதாரண சுவிட்ச் தான் வைத்திருப்பார்கள்.
அதற்குப்பதிலாக எம்சிபி வைத்தால்,ஹீட்டரில் ஏதாவது ஷார்ட் சர்குட் ஆகும் போது ட்ரிப் ஆகி நம்மை காக்கும்.
எப்போதும்,சுடு நீர் தயார் பண்ணிவிட்டு, MCB ஐ ட்ரிப் பண்ணிவிட்டு குளிக்கப்போவதே நல்லது.இதே போல,வெட் கிரைண்டருக்கும் எம்சிபி பொருத்திக்கொள்வதே நல்லது.
viii)ஈர மின் சாதனங்களான வாஷிங் மெஷின்,கிரைண்டர் போன்றவற்றைக் கையாளும் போது,சுவிச்சை ஆஃப் பண்ணாமல் ஈரத் துணிகளை எடுப்பதோ,மாவை அள்ளுவதோ கூடவே கூடாது.
ix)இவ்வளவு கவனமாக இருந்தும்,
ஆக்சிடெண்டலாக ஷாக் அடிக்க நேர்ந்தால்,
நேர்ந்து விட்டால்,
அருகிலுள்ளவர் ஒரு கம்பால் அல்லது துடைப்பக் கட்டையால்
பாதிக்கப் பட்டவரின் கையை அடிக்க வேண்டுமே அன்றி,பாதிக்கப்பட்டவரை நேரடியாக தொடவேக் கூடாது.
கிரைண்டரில் ஷாக் அடித்த மருமகளையும், பேத்தியையும் காப்பாத்த அவர்களை தொட்டு இழுத்து ,இறந்து போன மாமியாரையும்,
பல வருடங்களுக்கு முன்பு,
திருநெல்வேலி அருகே,இன்சுலேஷன் பாதிப்படைந்த சர்வீஸ் லைன் மேல் பட்டு
,கீழே வீழ்ந்து கிடந்த டிவி ஆண்டெனாவைத் தொட்ட ஒரு மனைவியைக் காப்பாற்ப் போன கணவன்
தொடர்ந்து தொட்ட மகன், மகள், உறவினர்களென்று கிட்டத்தட்ட ஏழு பேர் ஒரே நேரத்தில் இறந்து போனதையும் மறக்கவே கூடாது.
இம்மாதிரியான நேரங்களில் உணர்ச்சி வசப்படாமல்,அறிவு பூர்வமாக செயல்பட வேண்டும்.
செருப்பு இதற்கு நல்ல ஸேஃப்டி டூல்.
அதனால்,அடித்துக் கூட காப்பாற்றலாம்.
வீடென்றால் தொடப்பக்கட்டை!
வெளியே என்றால் செருப்பு!!!
எளிதாகக் கிடைக்கும் என்பதற்காகத் தான்!
வேறொன்றுமில்லை!!!
(ஷாக் அடித்தால் தான்!!
சும்மா இருக்கும் போது அடித்து வம்பிழுக்க வேண்டாம்).
தண்ணீரில் வீழ்ந்தவரைக் காப்பாற்றப் போய் தானும் உயிர் விடற மாதிரி ஆகிவிடக் கூடாதல்லவா?
x)கைக் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு மின்சாதனங்களைத் தொடவே கூடாது.
குழந்தைகளுக்கு எட்டும்படியாக சுவிச் பாக்ஸ் வைக்கக் கூடாது.
xi)சிங்கிள் பேஸ் சப்ளை வைத்திருப்போர்,
இரு முனை அயன்கிளாட் சுவிச்சும்,
3 பேஸ் சப்ளை வைத்திருப்பவர்கள் 4 முனை சுவிச்சும் வைத்திருக்க வேண்டும்.
நியூட்ரலில் லின்க் போட்டிருக்க வேண்டும்;
ஃப்யூஸ் போடக் கூடாது.
நியூட்ரல் கிரவுண்டிங்கை சரியாகப் பராமரிக்க வேண்டும்.
xii) நமது வீட்டில் பொருத்தியுள்ள UPS க்கு மின்வாரிய நியூட்ரலைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகின்றோம். மின்சாரம் இல்லாத போது நமது UPS மூலம் நமது மின் சாதனங்கள் இயங்கும்போது,அவையேதும் ஃபால்ட்டானால்,
நியூட்ரல்/ எர்த் வழியாக மின்கம்பத்திற்கு மின்சாரம் வந்து சில மின் ஊழியர்கள் இறந்துள்ளனர்.
ஆகவே நாம் UPS ல் உள்ள நியூட்ரலை பயன்படுத்திக்கொண்டால் மின்கம்பத்திற்கு மின்சாரம் வராமல் அல்லது மின்சாரம் இல்லாத போது மெயின் சுவிட்சை ஆஃப் செய்து வைத்து மின்வாரியத்திற்கு உதவி உயிர் பலியினை தடுப்பது நமது கடமை.
UPS சப்ளைக்கு காமன் நியூட்ரலை பயன்படுத்துவது தான் பொதுவாகப் புழக்கத்தில் இருக்கிறது.
UPS சப்ளைக்கு தனி நியூட்ரலை பயன்படுத்த வேண்டுமாயின்,
UPS ஃபீடிங் சர்கூட்டின் நியூட்ரலையும்,
பேஸ் மாதிரியே தனியாகப் பிரித்து,UPS இன் பேஸ், நியூட்ரலுக்குமாகத் தனியாக ஒரு காண்டேக்டர் மூலமாக UPS சர்கூட்டின் சப்ளையை பராமரிப்போமானால்,
சர்கூட்டின் ஃபேனோ,லைட்டோ பழுதடைந்தால்,UPSஇன் பேஸ், வாரியத்தின் நியூட்ரலுக்கு ரிட்டர்ன் சப்ளை போகாது.
இது எளிதான காரியமல்ல.
அதற்குப்பதில்,RCCB இணைத்தோமானால்,யுபிஎஸ் சப்ளை,வாரியத்தின் லைனுக்கு பேக் ஃபீடாகி விபத்து நேர்வதை தடுக்கலாம்.இது கொஞ்சம் மெனக்கெட்டு செய்யனும்.
xiii) முதலில் சொன்னதையே இறுதியிலும் சொல்கிறேன்,ELCB ஐ அவசியம் வாங்கிப் பொருத்துங்கள்.
தமிழ்நாட்டில் சராசரியாக 342 மிமீ மழை பெய்ய வேண்டும். ஆனால் ஏற்கனவே அந்த சராசரி அளவை தமிழ்நாடு கடந்துவிட்டது. தமிழ்நாட்டில் தற்போது வரை 583 மிமீ மழை பெய்துள்ளது.
கடந்த 1950ல் இருந்து 70 வருடங்களில் வெறும் 10 சீசனில் மட்டுமேதான் இந்த அளவிற்கு மழை பெய்துள்ளது. இதற்கு முன் 10 சீசனில் மட்டுமே நடந்த அதிசயம் தமிழ்நாட்டில் இந்த முறை மீண்டும் நடக்கிறது.*
எனவே,வீட்டின் அனைத்துச் சுவர்களும் ஓதம் காக்கும்.குறிப்பாக,மெயின் சுவிட்ச் போர்ட் இருக்குமிடம் சொதசொதன்னு இருக்க அதிக வாய்ப்புள்ளது.
ஈரம் மின்சாரத்திற்கு நண்பன்!எனவே,நாம்தான், இந்த கடும்
மழைக் காலத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
0 Comments