கடந்த 4 ஆண்டுகளில் 894 போலி நிறுவனங்கள் கண்டுபிடிப்பு

கடந்த 4 ஆண்டுகளில் 894 போலி நிறுவனங்கள் கண்டுபிடிப்பு

in News / Business

நாட்டில் இயங்கி வரும் போலி நிறுவனங்கள் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று மக்களவையில் கூறுகையில்

கடந்த 2015 முதல் 2018 வரையிலான 4 ஆண்டுகளில், சி.பி.ஐ. அமைப்பு 108 வழக்குகளில் மேற்கொண்ட விசாரணை மூலம் 894 போலி நிறுவனங்களை கண்டுபிடித்துள்ளது. இதில் தவறான நிதி அறிக்கைகள், வங்கி மோசடி, தவறான வழிக்கு நிதியை திருப்புதல், ஆள்மாறாட்டம், முறைகேடு, குற்றசதி உள்ளிட்ட பல்வேறு தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதைப்போல 104 போலி நிறுவனங்களுக்கு எதிராக 30 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன’ என்று தெரிவித்தார்.

இதில் சில போலி நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மீது ஒன்றுக்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறிய நிர்மலா சீதாராமன், மேற்படி 108 வழக்குகளில் 72-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதைப்போல 104 போலி நிறுவனங்கள் மீதான 30 வழக்குகளில், 24-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top