ஜியோ, ஐடியா வோடபோன் அனைத்தும் வாடிக்கையாளர்களை கைவிட்ட நிலையில் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி, ஏர்டெல் வாடிக்கையாளர்கள், வைஃபை நெட்வொர்க் மூலமாகவே `கால்ஸ்’ செய்ய முடியும் என்று அதிரடி அறிவிப்பை ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது
நெட்வொர்க் கிடைக்காத சமயத்தில் கூட வைஃபை மூலமே கால் செய்ய முடியும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏர்டெல் வைஃபை வழியாக குரல் அழைப்பை அறிமுகப்படுத்தும். இந்த வைஃபை சேவை குறிப்பிட்ட மொபைல்களில் மட்டுமே பயன்படுத்த முடியும் எனவும் ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. வைஃபை அழைப்பின் இந்த சேவை முதலில் ஆப்பிள், சாம்சங், சியோமி மற்றும் ஒன்ப்ளஸ் ஆகிய நான்கு பிராண்டுகளின் 24 ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும்.
இந்த அம்சத்தை பயன்படுத்த விரும்பினால், அம்சத்தை ஆதரிக்கும் செல்போன் மற்றும் டெல்லியில் ஏர்டெல் 4 ஜி சிம் கார்டு தேவைப்படும். இந்த இரண்டையும் பெற்றவுடன், உங்கள் தொலைபேசியில் இந்த அம்சத்தை எவ்வாறு இயக்குவது என்பதற்கான படிப்படியான செயல்முறை தற்போது வலை தளங்களில் வெகு வேகமாக பரவி வருகிறது.
தற்போது இந்த சேவை டெல்லி என்.சி.ஆரில் வழங்கப்படுகிறது, மேலும் சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்திலும் விரைவில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments