ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநரான அனில் அம்பானி, இந்த மாத தொடக்கத்தில் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்திருந்த நிலையில், அவரின் ராஜினாமா கடிதத்தை அந்நிறுவன முதலீட்டாளர்கள் நிராகரித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக, கடன் பிரச்சனையால் தவித்து வந்துள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் இயக்குநரான அனில் அம்பானி கடந்த சில நாட்கள் முன்பு தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். இவரை தொடர்ந்து, மற்ற இயக்குனர்களான சாயா விரானி, ரைனா கரானி, மஞ்சரி, சுரேஷ் ரங்காசார் ஆகியோரும் தங்களது பொறுப்புகளிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் கடன் வழங்குனர்கள் குழு கடந்த 20ஆம் தேதியன்று சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டது. இந்த சந்திப்பின் முடிவாக, அனில் அம்பானி மற்றும் மற்ற நால்வரின் ராஜினாமா கடிதத்தையும் நிராகரித்துள்ளதோடு, அவர்களின் பொறுப்புக்களிலிருந்து விலகாமல், வருவதை சந்திக்குமாறு அறிவுறுத்தியுள்ளது முதலீட்டாளர்கள் குழு
0 Comments