காலகட்டம் காலாண்டிதழ் மற்றும் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் தமிழ்த் துறை இணைந்து நடத்திய எழுத்தாளர். கீரனூர் ஜாகிர்ராஜாவின் படைப்புலகம் குறித்த கருத்தரங்கம் இன்று காலை 10 மணிக்குத் துவங்கி நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பல்வேறு பிரபல இலக்கியவாதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மீன்காரத்தெரு, கதாரசனை, அழியாத கோலங்கள், துருக்கித் தொப்பி, கருத்த லெப்பை போன்ற முக்கியமான பல படைப்புகளை எழுதியவர் எழுத்தாளர். கீரனூர் ஜாகிர்ராஜா. அவரது படைப்புகள் குறித்த கருத்தரங்கம் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் மாணவிகளின் தமிழ்த்தாய் பாடலோடு இனிதே துவங்கியது. ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர். முனைவர். சி.இராஜப்பா முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை இணைப்பேராசிரியர். முனைவர். ஜி.ஐசக் அருள்தாஸ் வரவேற்புரை வழங்கினார். தமிழ்த்துறை இணைப்பேராசிரியர். முனைவர்.டி. தேவ சம்பத் அறிமுக உரை நிகழ்த்தினார்.
நகர்வு வெளியீட்டகம் சார்பில் அருட்பணி. ஆண்டனி கிளாரெட் தலைமையுரை வழங்கினார். ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் முதல்வர். ஜே.ஆர்.வி.எட்வர்ட் தொடக்கவுரை நிகழ்த்தினார். நாவலாசிரியர். பொன்னீலன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலத் தலைவர். சி.சொக்கலிங்கம், இலைகள் இலக்கிய இயக்கம் சார்பில் எழுத்தாளர்கள். இடலாக்குடி. அசன், உஷாதேவி மற்றும் மருத்துவர் அழகுநிலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். ஐ.தர்மசிங் பாடல்கள் பாடினார்.
கீரனூர் ஜாகிர்ராஜாவின் படைப்புகளில் காணப்படும் 'சமூக விமர்சனமும், வடிவ உத்தியும்' குறித்து எழுத்தாளர் எச்.பீர் முகமதுவும், விளிம்பு நிலையினர் வாழ்வும் , நாட்டாரியலும் குறித்து கவிஞர். நட.சிவகுமாரும், அபுனைவும், கட்டுடைத்தலும் குறித்து குறித்து எழுத்தாளர். ஜே.எம். ஹசனும் , சிறுகதை எழுத்தும், பெண்கதாமாந்தர்களும் குறித்து நாவலாசிரியர். மலர்வதியும், படைப்பின் பன்முகம் குறித்து ஊடகவியலாளர். என்.சுவாமிநாதனும், நாவல்களில் பெண்களும் , இனவரைவியலும் குறித்து ஆய்வாளர். சௌம்யாவும் கலந்துரையாடினார்கள்.
இறுதியில் எழுத்தாளர். கீரனூர். ஜாகிர்ராஜா ஏற்புரை வழங்கினார். நிகழ்ச்சி நிரலை ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் தமிழ்த்துறை முனைவர். ஜோஸ்லி திலகர், பேரா.ஜே.கிங்ஸ்லி மற்றும் பேரா. ற்றி. நிஷாவும் தொகுத்து வழங்கினார்கள். நிகழ்ச்சியை காலகட்டம் காலாண்டிதழின் ஆசிரியர். ஐ.கென்னடி ஒருங்கிணைத்து சிறப்பித்தார். விழாவின் இறுதி நிகழ்வாக ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர்.முனைவர். டி.தேவதாஸ் நன்றியுரை கூறி விழா நிறைவு பெற்றது. ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் தமிழ்த்துறை மாணவ, மாணவிகள் விழாவில் திரளாகக் கலந்து கொண்டு பங்குபெற்றனர்.
0 Comments